வெள்ளம், சூறாவளி போன்ற அனர்த்தங்களின்போது பாதுகாப்புப் பெறுவோம்

 வயல் நிலமெல்லாம் வெள்ளக் காடு, மலை நாட்டில் தொடர் மழை, மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு, வெள்ளப் பெருக்கு 50 க்கு மேற்பட்டோர் பலி, ஜனாதிபதி இரங்கல், பிரதமர் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணம். இவை நாம் வருடா வருடம் இலங்கையின் ஏதோ ஓரு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது  கூறும் அதே புளித்துப்போன ஆறுதல் வரிகள். பொதுவாகவே இலங்கையில் எவ்விதமான இயற்கை பேரிடர்களுக்கும் அதை எதிர்கொளவது பற்றிய அறிவு மிகவும் குறைவு.

அனைத்து மதத்தவர்களும் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வு

வடக்கில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை நாம் அறிவோம். நாம் உருவாக்க முயற்சிக்கும் அரசியலமைப்பில் ஒற்றை ஆட்சிக்குள் பிளவுபடாத, பிளவுபடுத்த முடியாத இலங்கைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்கத் தயாராக உள்ளோம்.  தமிழ் மக்களுடன் கலந்துரையாடி சகல இனத்தவருக்கும், சகல மதத்தவருக்கும் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை அரசியலமைப்பின் மூலமாக பெற்றுக்கொடுக்கும் நிலைப்பாட்டிலிருந்து நாம் மாறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.…

இஸ்ரேலிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு

இஸ்ரேலிய எல்லை வேலிக்கு அருகில் வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கையின் போது இஸ்ரேலிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அஹ்மெட் அபூ அபெட் என்ற சிறுவனே கடந்த செவ்வாய்க்கிழமையன்று உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல்கித்ரா தெரிவித்தார். கான் யூனிசின் கிழக்குப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காயத்திற்குள்ளான நான்கு வயதும் எட்டு மாதங்களும் உடைய அஹ்மெட் அபூ அபெட் உயிரிழந்ததாக தனது அறிக்கையில் அல்கித்ரா தெரிவித்திருந்தார்.…

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குக

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவும், நம்பிக்கையும் உள்ளது.  இந்த உண்மையை அனைவரும் புரிந்துகொண்டு அரசியலமைப்பிற்கும்  சட்ட ஆட்சிக்கும்  ஜனநாயகத்துக்கும் முழுமையாக  மதிப்பளித்து ரணில் விக்கிரமசிங்கவிற்கே  பிரதமர் பதவியை வழங்க வேண்டுமென  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும்  நம்பிக்கை பிரேரணையை சபையில் நேற்று புதன்கிழமை சமர்ப்பித்து…