அமெரிக்காவும் இஸ்ரேலும் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறின
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ அமைப்பிலிருந்து புத்தாண்டு ஆரம்பித்த நள்ளிரவில் உத்தியோகபூர்வமாக வெளியேறின. வெளியேறவுள்ளதாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அச்செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
சமாதானத்தைப் பேணிக் காக்கும் நோக்கில் இரண்டாம் உலக மகா யுத்தத்தினைத் தொடர்ந்து அமெரிக்கா இணைந்து ஆரம்பித்த யுனெஸ்கோ அமைப்பிற்கு இந்த வெளியேற்றம் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.
2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ட்ரம்ப் நிருவாகம் தனது வெளியேற்றம் தொடர்பில்…