முஸ்லிம் ஆசிரியைகள் ‘அபாயா’ வுடன் மீண்டும் ஷண்முகா கல்லூரி சென்றனர்
திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு அபாயா அணிந்து கொண்டு சென்ற 4 முஸ்லிம் ஆசிரியைகளுக்கு பாடசாலை நிர்வாகம் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட முஸ்லிம் ஆசிரியைகள் கடந்த 9 மாத காலமாக தற்காலிக இடமாற்றத்தில் இருந்து வந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் குறித்த பாடசாலைக்கு அபாயா அணிந்து கடமைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
ஆசிரியைகளான பாத்திமா பஹ்மிதா ரமீஸ், சஜானா பாபு முஹம்மத் பசால், சிபானா முஹம்மத் சபீஸ்,ரஜீனா ரோஷான் ஆகியோரே நேற்று வழமைபோன்று இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் அபாயா அணிந்து ஷண்முகா இந்துக்…