சவூதி சிறையிலுள்ள பெண்ணுரிமை செயற்பாட்டாளர்களை பார்வையிட அனுமதிக்குமாறு வேண்டுகோள்
அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சவூதியில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பெண்ணுரிமை செயற்பாட்டாளர்களை பார்வையிட்டு, அவர்கள் சித்திரவதை செய்யப்படுகின்றமை, சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகினறமை மற்றும் குடும்பத்தினர் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படாமை போன்ற குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்திலுள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்கு, தடுப்புக்காவல் மீளாய்வுக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்…