336 கோடி ரூபா ஹெரோயின் விவகாரம்: பிரதான சந்தேகநபர் பங்களாதேஷ் பெண்
இலங்கை முழுவதும் ஹெரோயின் விநியோகிக்கும் பாதுகாப்பு இல்லமாகவும் மத்திய நிலையமாகவும் செயற்பட்டுவந்த வீடொன்றை சுற்றிவளைத்து அங்கிருந்து 336 கோடி ரூபா பெறுமதியான 278 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை மீட்ட விவகாரத்தின் பின்னணியில் உள்ள சந்தேகநபர் பங்களாதேஷ் பெண் ஒருவரெனத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் இடம்பெறும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விசாரணைகளில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரின் சுறறிவளைப்புக்கு முன்னரேயே அந்தப்…