இலங்கை அரசாங்கம் வழங்கிய நன்கொடை பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.பணியக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது
பலஸ்தீனின் காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை நிதி பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணியகத்தின் (UNRWA) வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃப்ரான்ச் தெரிவித்தார்.