வடக்கு மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்குவோம்
வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை அரசாங்கமும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
குறித்த வெள்ளம் காரணமாக 38,209 குடும்பங்களைச் சேர்ந்த 118,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2827 குடும்பங்களைச் சேர்ந்த 8936 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து 27 முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் பலர் வெள்ளம் வடிந்து மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ள போதிலும் முழுமையாக தமது வீடுகள், வாழிடங்களை…