இன்றைய அரசியல் சதுரங்கத்தில் அடுத்த காய் நகர்த்தலா ஆளுநர் நியமனம்?
தற்போது நாட்டில் இடம் பெற்று வரும் சடுதியான அரசியல் மாற்றங்களால் அரசியல் களம் தொடர்ந்தும் சூடு பிடித்த வண்ணமே உள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஒக்டோபர் 26ஆம் திகதி அரசியல் யாப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமித்தமை அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற கலைப்பு அதனையடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் ஒரு மாத காலம் நாடே ஸ்தம்பித்துப் போனது.
நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்த இவ்விடயம் மக்கள் போராட்டம், பேரணி, பாராளுமன்றத்தில் ஏற்பட்ட சொல்ல…