சவூதி அரேபியாவில் விவாகரத்து தொடர்பான தகவலை பெண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் வழங்க புதிய சட்டம்
பெண்ணொருவர் விவாகரத்துச் செய்யப்படும்போது அது தொடர்பான தகவலை குறித்த பெண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிப்பதற்கான புதிய சட்டம் சவூதி அரேபியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இரகசிய விவாகரத்துக்களைத் தடுப்பதற்காகவும், பெண்கள் தாபரிப்பு முதலிய பாதுகாப்புக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக தமது விவாக நிலையினை சரிவர உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் இப்புதிய சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பழைமைவாத மன்னராட்சியுடனான சவூதி அரேபியாவில் கடந்த வருடம் பெண்கள் வாகனம் செலுத்துவதற்கிருந்த தடை…