கண்டியில் மாடி கட்டிடத்தில் தீ: மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் கீழேவீசி தானும் உயிர் தப்பிய கணவன்
கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யட்டிநுவர வீதியில் நான்கு மாடி வர்த்தக கட்டிடமொன்றின் மூன்றாம் மாடியில் பரவிய தீயில் சிக்குண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் அக்குடும்பத் தலைவனின் துணிகர நடவடிக்கையால், பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்போடு காப்பாற்றப்பட்டனர். இந்த திகில் சம்பவம் நேற்றுக் காலை 6.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றது.
இதன்போது தீயில் சிக்கிக்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரில் 8, 7, மூன்றரை வயதுகளை உடைய மூன்று மகன்மாரையும் கட்டிடத்துக்கு கீழே கூடிய பொலிஸ் மற்றும்…