கிழக்கு மாகாணத்தில் 13ஐ அமுல்படுத்துவேன்
கிழக்கு மாகாணத்தில் 13 ஆவது சரத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் நீதி மன்றம் செல்லப்போவதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று முன்தினம் ஆளுநருக்கான கௌரவிப்பு நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பாராளுமன்ற பிரதிநிதியாக கடமையாற்றிய நிலையிலேயே அந்த பதவியை இராஜினாமா செய்துவிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை ஜனாதிபதியிடம் கேட்டுப் பெற்றுள்ளேன். இதனை…