ஞானசாரருக்கு வக்காலத்து வாங்கும் ஞானசூனியர்கள்
கொழும்பின் உயர்நீதிமன்ற நீதியரசர் ஆதித்திய பதபென்டிகே எனும் ஒரு பௌத்தர் பௌத்த துறவியென்ற போர்வைக்குள் மறைந்திருந்து கலகக்காரன் நாரதன்போன்று இலங்கையெங்கும் இனவாதத்தை வளர்த்துக் கலவரங்களையும் ஏற்படுத்திய அரசியல் பௌத்தத்தின் துஷ்டக் குழந்தை ஞானசாரருக்கு நான்கு வருடக் கடூழியச் சிறையும் நூறாயிரம் ரூபா அபராதமும் தண்டனைகளாக விதித்துள்ளமை இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னுள்ள வரலாற்றில் ஒரு மைல்கல் எனக் கருதலாம்.