மாகாண சபை தொகுதி எல்லை நிர்ணய விவகாரம்: மீளாய்வுக்குழு இன்னும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை
மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாக பிரதமர் தலைமையிலான மீளாய்வுக்குழு அமைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதும் இன்னும் அந்தக் குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் விரைவில் நடவடிக்கையெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் சபையில் கோரிக்கை விடுத்தனர்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பியே அவர்கள் இவ்வாறாகக் கோரிக்கை விடுத்தனர். அதன்போது தனது கருத்தை முன்வைத்த எதிர்க்கட்சி எம்.பியான…