வளைகுடா நெருக்கடிக்கு தீர்வுகாண நியமிக்கப்பட்ட அமெரிக்கத் தூதுவர் இராஜினாமா
பிராந்தியத் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு விரும்பவில்லை எனத் தெரிவித்து கட்டாருக்கும் அதன் வளைகுடா அரபு அயல்நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமெரிக்கத் தூதுவர் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து கட்டாருடனான இராஜதந்திர மற்றும் போக்குவரத்துத் தொடர்புகளை நான்கு அரபு நாடுகள் துண்டித்த நிகழ்வு இடம்பெற்று 18 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தன்னால்…