14 ஆண்டுகளாகியும் கையளிக்கப்படாமல் காடு பற்றிக்கிடக்கும் வீடமைப்புத் திட்டம்

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 14 ஆண்டுகள் கழிந்தும் இவ் அனர்த்தத்தின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக சவூதி அரசாங்கத்தின் நிதி மூலம் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டம் இதுவரை தமக்கு வழங்கப்படாமல் உள்ளதென பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சுனாமிப் பேரலையின் கோரத் தாண்டவத்தினால் அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான வீடுகள் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்தன. சிலரது உயிர்கள் கடலலையால் காவு கொள்ளப்பட்டன.…

முஸ்லிம் சமூகத்தை சூழ்ந்துள்ள ஆபத்து

நாட்டில் முஸ்லிம் சமூகத்தை அச்சமூட்டும் செயற்பாடுகள் முற்றுப் பெறுவதாகத் தெரியவில்லை. மாவனெல்லைப் பிரதேசத்தில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் இன்று பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளன. இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதே இந்த அச்சத்திற்குக் காரணமாகும். மாவனெல்லை யில் ஏற்கனவே பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற கலவரம் மாவனெல்லைக்குப் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியதுடன் சிங்கள - முஸ்லிம் உறவையும் சீர்குலையச் செய்தது.…

சதகத்துல்லா மௌலவி ஜம்இய்யாவின் வளர்ச்சிக்காக நீண்டகாலம் உழைத்தார்

சத­க­த்துல்லா மௌலவி ஜம்­இய்­யாவின் வளர்ச்­சிக்­காக நீண்­ட­காலம் உழைத்­துள்ளார் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தெரி­வித்­துள்­ளது. அன்­னாரின் மறை­வை­யொட்டி வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, வபாத்­தான அஷ்ஷெய்க் ஏ.ஸி.எம். சத­கத்­துல்லாஹ் நத்வி அவர்­களின் வபாத் செய்தி கேட்டு கவ­லைப்­ப­டு­கிறோம். அன்னார் கண்டி மாந­கர ஜம்­இய்­யத்துல் உலமா கிளையின் உறுப்­பி­ன­ராக இருந்­த­தோடு அதன் உப தலை­வர்­களில் ஒரு­வ­ரா­கவும் இருந்து நீண்­ட­காலம் ஜம்­இய்­யாவின் வளர்ச்­சிக்­காக உழைத்­தார். சிங்­கள…

சிலைகளை சேதப்படுத்தியமை வன்மையாக கண்டிக்கத்தக்கது

சிலை­களைச் சேதப்­ப­டுத்­தி­யதை இலங்கை ஜமா­அத்தே இஸ்­லாமி வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து ஜமா­அத்தே இஸ்­லா­மி­யினால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் மாவ­னெல்லைப் பிர­தே­சத்தில் இடம்­பெற்ற புத்தர் சிலை­களைச் சேதப்­ப­டுத்­திய நிகழ்வை இலங்கை ஜமா­அத்தே இஸ்­லாமி வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. இனங்­க­ளுக்­கி­டையில், மதங்­க­ளுக்­கி­டையில் இணக்­கப்­பாட்டைத் தோற்­று­விக்க சமூக நிறு­வ­னங்கள் அய­ராது முயற்­சித்துக்…