வடக்கு, கிழக்கிற்கு தமிழ், முஸ்லிம் சமூக ஆளுநர்கள் நியமிப்பு வரவேற்கத்தக்கது
தமிழ்பேசும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அவர்களின் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் முதன்முறையாக ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளதானது வரவேற்கத்தக்கதோர் முன்னேற்றமாகும். நம் நாட்டில் மாகாண சபை ஆட்சிமுறை 1987இல் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடங்கி இன்றுவரையிலான கடந்த 31 வருடங்களாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களே இப்பதவிகளில் அமர்த்தப்பட்டு வந்துள்ளனர். அந்த நிலமை தற்போது மாறுபட்டுள்ளதனை நோக்கும்போது நம்பிக்கையூடடும் புதியதோர் அத்தியாயம் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில்…