அரசியலில் களமிறங்க கோத்தா தீர்மானம்
மக்களின் அபிப்பிராயத்தை கொண்டு அதற்கமைய தாம் அரசியல் களத்தில் இறங்கவுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது தலைமையில் அடுத்த தேர்தல்களை சந்திக்க 'வியத்மக' அமைப்பினூடாக புதிய வேலைத்திட்டத்தை கையாள தீர்மானித்துள்ளதாகவும், இந்த நகர்வுகளுக்கு மஹிந்த ராஜபக் ஷ இணக்கம் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவும் இதற்கு இருப்பதாக அவர் முக்கிய பிரதிநிதிகளுடனான தனிப்பட்ட சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.