அனர்த்­தத்தால் பாதிக்­கப்­பட்டோர் தொகை 1,25,000 ஐ தாண்­டி­யது

வடக்கில் வெள்­ளப்­பெ­ருக்­கினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை ஒரு இலட்­சத்து 25 ஆயி­ரத்து 519 ஆக அதி­க­ரித்­துள்­ள­துடன் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பலர் இன்னும் பாது­காப்­பான இடங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது. மேலும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்குத் தேவை­யான நிவா­ர­ணங்­களை வழங்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­துடன் தனியார் துறை­களும் உத­வி­களை பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இது தொடர்பில்…

இலங்கையில் அனர்த்தங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்து செல்கின்றன

பொறியியலாளர் அஸ்லம் சஜா தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பின்னர் பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவப் பணிகளில் ஈடுபட்ட அனுபவத்தைக் கொண்டவர். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு சரியாக 14 ஆண்டுகள் பூர்த்தியாகும் இன்றைய நாளில் அனர்த்த பாதுகாப்பு தொடர்பில், பொறியியலாளர் அஸ்லம் சஜா, 'விடிவெள்ளி' க்கு வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம். Q உலகின் பல பாகங்­க­ளி­லு­முள்ள    நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இலங்கை அதிக அனர்த்த…

அமைதி தொடர ஒத்துழைப்போம்

மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அப் பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் நிலவியபோதிலும் பாதுகாப்பு தரப்பினதும் நீதிமன்றத்தினதும் அப் பகுதிவாழ் பௌத்த மக்களினதும் தீர்க்கமான செயற்பாடுகளால் அங்கு அமைதி நிலவுகிறது. எனினும் சிலை உடைப்பு நடவடிக்கைகளை எதிர்த்து மாவனெல்லை பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு பௌத்த தேரர் ஒருவர் தலைமையிலான குழுவினர் முயற்சித்த போதிலும் அதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விடயத்தில் பொலிசார் முன்னெச்சரிக்கையாக செயற்பட்டு தடையுத்தரவைப்…

டமஸ்கஸில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் திறக்கப்பட்டது

சிரியப் படை­க­ளுடன் மோதலில் ஈடு­பட்ட கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்த பிராந்­திய எதிர்­நிலை நாடு­க­ளுடன் இரா­ஜ­தந்­திரத் தொடர்­பு­களை வலுப்­ப­டுத்தும் நகர்­வு­களை ஜனா­தி­பதி பஷர் அல்-­அஸாத் மேற்­கொண்டு வரும் நிலையில் டமஸ்­கஸில் ஏழு ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் ஐக்­கிய அரபு அமீ­ரக தூத­ரகம் திறக்­கப்­பட்­டுள்­ளது. 2011 ஆம் ஆண்டு பஷர் அல்-­அ­ஸா­திற்கு எதி­ராக மக்கள் எதிர்ப்பு ஆரம்­ப­மா­கி­ய­தை­ய­டுத்து ஐக்­கிய அரபு அமீ­ரகம் தூதரகத்தை மீள அழைத்துக் கொண்­டது. அந்தப் போராட்டம் கொடூ­ர­மான பல்­முனை யுத்­த­மாக மாறி­ய­தோடு அதன்…