புத்தர் சிலை சேதம் விளை­விப்பு: கலா­சார அமைச்சு புறம்­பாக விசா­ரணை

மாவ­னெல்லை மற்றும் கடு­கண்­ணாவை பிர­தே­சங்­களில் நான்கு இடங்­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்த புத்தர் சிலை­களை சேதப்­ப­டுத்­தி­யமை தொடர்­பாக கலா­சார அமைச்சு புறம்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மென வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், சேத­மாக்­கப்­பட்­டமை தொடர்பில் விரி­வான விசா­ர­ணையை மேற்­கொள்ள கலா­சாரத் திணைக்­களம், தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரி­களை ஈடு­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொண்டுள்­ளது.…

மாவ­னெல்­லையில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஜனவரி 11 வரை தடை

மாவ­னெல்ல பகு­தி­களில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டமை தொடர்­பாக எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் பௌத்த பிக்­குகள் அடங்­கிய குழு­வி­னரால் கடந்த 29ஆம் திகதி நடாத்­த­வி­ருந்த ஊர்­வ­லத்­திற்கு மாவ­னெல்லை மஜிஸ்திரேட் நீதி மன்­றத்தால் தடை­யுத்­த­ர­வொன்று பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. குற்­ற­வியல் வழக்கு அமு­லாக்கல் சட்­டத்தின் 106 (1) உறுப்­பு­ரைக்­க­மைய மேற்­கொள்­ளப்­பட்ட மேற்­படி நீதி­மன்ற பணிப்­புரை வரு­மாறு: 2018.12. 28 ஆம் திகதி மாவ­னெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி எம்.டீ.டீ. நிலங்க மூலம் மாவ­னெல்ல ம/உ வழக்கு…

ஞான­சார தேர­ருக்கு பொது மன்­னிப்பு? முஸ்லிம்கள் துணை போகலாமா?

ஏ.எல்.எம். சத்தார் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு ஜனா­தி­பதி பொது மன்­னிப்பு வழங்கி அவரை விடு­விப்­பது குறித்த விட­யமே இப்­போது நாட்டில் பேசு­பொ­ரு­ளா­க­வுள்­ளது. ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் போனமை குறித்த வழக்கு விசா­ரணை ஹோமா­கம நீதி­மன்­றத்தில் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது ஞான­சார தேரர் நீதி­மன்ற வள­வுக்குள் பிர­வே­சித்து நீதி­ப­தி­யையும் மன்­றத்­தையும் அவ­ம­தித்த வழக்குத் தீர்ப்பிற்கமையவே இவர் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரு­கிறார்.…

14 ஆண்டுகளாகியும் கையளிக்கப்படாமல் காடு பற்றிக்கிடக்கும் வீடமைப்புத் திட்டம்

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 14 ஆண்டுகள் கழிந்தும் இவ் அனர்த்தத்தின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக சவூதி அரசாங்கத்தின் நிதி மூலம் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டம் இதுவரை தமக்கு வழங்கப்படாமல் உள்ளதென பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சுனாமிப் பேரலையின் கோரத் தாண்டவத்தினால் அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான வீடுகள் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்தன. சிலரது உயிர்கள் கடலலையால் காவு கொள்ளப்பட்டன.…