முஸ்லிம் அலகு முதல் கிழக்கு ஆளுநர் வரை
கிழக்கு ஆளுநர் நியமனத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தால் கடையடைப்பு வெற்றியளிக்காத நிலையில் கிழக்கில் அண்மைக்காலமாக வேகம் பெற்றுவரும் இனத்துவ முறுகல் நிலை குறித்து சிறுபான்மை இனங்கள் சிந்திக்கவேண்டிய காலப்பகுதிக்குள் தள்ளப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் பெரும்பான்மையின் அடக்குமுறைகளுக்கு எதிராக தன்னுடன் ஒன்றித்துப் போராடிய சமூகத்தின் மீதே தமிழ் ஆயுதக் குழுக்கள் தமது துப்பாக்கிகளை நீட்டின. இதனால் முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையுடன் விரும்பியோ விரும்பாமலோ ஒன்றித்துப் போகவேண்டிய சூழலை ஏற்பட்டது. தமிழினத்தின்…