கிழக்கின் அபிவிருத்தியை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளமை வெட்கக்கேடானது

கிழக்கு மாகா­ணத்தின் அபி­வி­ருத்­தியை அர­சாங்கம் இந்­தி­யா­விடம்  பொறுப்­பாக்­கி­யுள்­ளது. இது வெட்­கக்­கே­டா­னது. அவ்­வா­றாயின் கிழக்கு மாகாண உறுப்­பி­னர்கள் அனை­வரும் இந்­திய தூது­வரை சந்­தித்து பிரச்­சி­னை­களை குறிப்­பிட வேண்டும். நிதி­ய­மைச்சின் செய­லாளர் மஹிந்த சிறி­வர்­தன எழு­திய  2025 ஆம் ஆண்­டுக்­கான வரவு  செலவுத் திட்­டத்தில்  கிழக்கு மாகா­ணத்தின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. இந்த பாதீட்டை தூக்­கி­யெ­றிய வேண்டும் என  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிசாம்…

ரமழான் மாத நோன்பு காலத்தில் உள்ளூராட்சி தேர்தல் நடக்காது

ரமழான் காலத்தில் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் இடம்­பெ­றாது என நினைக்­கிறேன். அதே­போன்று  பரீட்சை காலத்­திலும் நோன்பு காலத்­திலும் தேர்தல் இடம்­பெற்ற வர­லாறு எமது நாட்டில் இருக்­கி­றது என தேசிய ஒரு­மைப்­பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி அதி­கா­ர­ச­பைகள் விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தின் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் ஐ.நா. கரிசனை

இலங்­கை­யினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் பெண்கள், சமா­தானம் மற்றும் பாது­காப்பு தொடர்­பான தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் தமது பாராட்டை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்கும் பெண்­க­ளுக்கு எதி­ரான ஒடுக்­கு­மு­றை­களை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­கான ஐக்­கிய நாடுகள் குழு, முஸ்லிம் விவாக,விவா­க­ரத்து சட்டம் தொடர்பில் தீவிர கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

நீதிமன்றினுள் துப்பாக்கி சூடு கனேமுல்ல சஞ்ஜீவ மரணம்

பிர­பல பாதாள உலக உறுப்­பி­ன­ராக அறி­யப்­படும் கனே­முல்ல சஞ்­ஜீவ கொழும்பு நீதிவான் நீதி­மன்றினுள் வழக்கு விசா­ர­ணையின் இடையே நேற்று முற்­பகல் 10.00 மணி­ய­ளவில் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். பேலி­ய­கொடை பகு­தியில் இரவு நேரம் பலாத்­கா­ர­மாக வீடொன்­றுக்குள் புகுந்து நபர் ஒரு­வரை கொலை செய்த சம்­பவம் தொடர்பில், கொழும்பு மேல­திக நீதிவான் பவித்ரா சஞ்­ஜீ­வனீ பத்­தி­ரன முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­ட­போது இந்த சம்­பவம் பதி­வா­னது.