காஸாவின் பெரும்பகுதியை விழுங்கும் இஸ்ரேல் அன்றிருந்த காஸா இன்றில்லை
காஸாவின் தெற்கு நகரமான ரபாவை துண்டித்து, அப் பிரதேசத்தை பல பகுதிகளாகப் பிரிக்கும் மற்றுமொரு இராணுவ நடவடிக்கையினை பூர்த்தி செய்துள்ளதாக இஸ்ரேல் கடந்த வார இறுதியில் அறிவித்தது. காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, குண்டுவீச்சுகள் தொடரும் அதே வேளை, காசாவின் 2.3 மில்லியன் மக்களில் அதிகமானோர் எப்போதும் மிகவும் சனநெரிசலுக்குள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.