குறித்த ஒருவருக்கு நாம் வாக்களிக்கும் போது நமது வாக்குகளினூடாக அவர் சமூகத்தின் தலைமைக்கோ குறித்த ஒரு பதவிக்கோ பொருத்தமானவர் என நாம் சாட்சி கூறுகிறோம். நாம் சொல்கின்ற, வழங்குகின்ற சாட்சியங்கள் எப்போதும் உண்மையானதாகவே இருக்க வேண்டும்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் தான் படைத்த படைப்புக்களில் தனக்கு விருப்பமான சில பொருட்கள் மீது சத்தியமிட்டு பல்வேறு செய்திகளைச் சொல்கிறான், அவற்றுள்
வைகறை பொழுதின் மீதும், பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக' என்று அல்லாஹ் சூரதுல் பஜ்ரை ஆரம்பம் செய்கிறான்.
ஷஃபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும், இன்னும் இது புனிதமிக்க ரமழானுக்கு முன்னுள்ள அருள்கள் நிறைந்த ஒரு மாதமாகும். இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹ்) அவர்கள் தனது லதாயிபுல் மஆரிப் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். இமாம் அபூ பக்ர் அல் வர்ராக் அல் பல்ஹி என்ற அறிஞர் கூறுகிறார்; ரஜப் மாதம் காற்றைப் போன்றதாகும் ஷஃபான் மாதம் மழை மேகம் போன்றதாகும், ரமழான் மாதம் மழை போன்றதாகும், அது போலவே யார் ரஜப் மாதத்தில் விதை விதைத்து ஷஃபானில் அதற்கு நல்ல முறையில் தண்ணீர் பாய்ச்சுகிறாரோ அவரால்…