உழ்ஹிய்யா பிராணிகளின் ஆரோக்கியத்தை உறுதிசெய்க
நாட்டின் சில பகுதிகளில் மாடுகள் தோல் கழலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உழ்ஹிய்யா விடயத்தில் சுகாதார திணைக்கள ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் கடைபிடிப்பதுடன் உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வலியுறுத்தியுள்ளது.