இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம்: முஸ்லிம் கட்சியினரை மாத்திரம் ஜனாதிபதி ரணில் சந்திக்கலாகாது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் தரப்பை சந்திக்கும்போது, முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளை மாத்திரம் சந்தித்து பேச்சு நடத்தாமல், அனைத்து முஸ்லிம் தரப்புகளையும் இணைத்தே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமுன்வர வேண்டும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் மத விவகாரங்களுக்கு பொறுப்பான உறுப்பினருமான அப்துல் ஹலீம் தெரிவித்தார்.