முஸ்லிம்களை அரவணைத்தவர் சம்பந்தன் ஐயா
"ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் எல்லோரும் சிங்களவர்களுடன் சேர்ந்து, இலங்கையர் என உணரும் அடிப்படையில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் முறையில், தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும்" என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவந்த பழம்பெரும் தமிழ் அரசியல் தலைவரான இரா.சம்பந்தன் சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வாழ்க்கைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டார்.