நாட்டில் இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் ரணில்
இஸ்லாத்தின் பெயரில் அரசியல் வியாபாரம் செய்யக்கூடாது. தூய்மையான முறையில் முன்மாதிரியாக நடந்து பன்மைத்துவ கலாசாரம் பேணப்படுகின்ற இந்த நாட்டில் மாற்று மத மக்களிடையே முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் குறித்ததுமான நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். நான், இலங்கை அரசியலில் பதியுதீன் மஹ்மூதின் வழிமுறைகளை அதிகம் பின்பற்றுகிறேன். ரீ.பீ.ஜயா, ஏ.சி.எஸ்.ஹமீதின் அணுகுமுறைகளிலும் ஈர்க்கப்பட்டிருக்கிறேன் என்ற தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்தார் அமைச்சர் அலி சப்ரி.