சிறுபான்மை கட்சிகளின் கூட்டு சாத்தியப்பட வேண்டும்
முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பொன்று உருவாகவேண்டும் என்ற அவா நம் சமூகத்தின் மத்தியில் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என தேசிய அரசியலில் கால்பதித்த கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று இன்னும் சில கட்சிகள் நம் சமூகத்திடையே முளைத்திருக்கிறது. சமாதான ஐக்கிய முன்னணி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்பன பல உள்ளூராட்சி மன்றங்களிலும் பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளன. அத்துடன் நுஆ கட்சியும்…