எமது சமூகம் இன்னும் பாடம் கற்கவில்லை
2013 ஆம் ஆண்டு, முன்னைய அரசாங்கத்தின் ஆதரவுடன் நாட்டில் இனவாதிகள் தாண்டவமாடிய காலம் அது. அலுவலக விடுமுறை தினமொன்றில் நண்பர் ஒருவரின் நேகமயிலுள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தோம். கலாவெவ பகுதியை கடந்து செல்லும்போது, “இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அவுக்கன புத்தர் சிலை உள்ள இடம் அருகில் இருக்கிறது. போய் பார்த்துவிட்டுச் செல்லலாமே” என்றார் நண்பர். ஆவலுடன் “சரி” என்று கூறி இருவருமாக அங்கு சென்றோம்.
பிரதான நுழைவாயிலின் ஊடாக உட்செல்ல முற்டபட்டபோது அங்கு கடமையாற்றும் அதிகாரியொருவர் “ஒயாலா முஸ்லிம்த” என எம்மை நோக்கி வினவினார்?…