அறுவாக்காடு குப்பை திட்ட விவகாரம்: பிரதமருடன் பேச்சு நடத்த திட்டம்
கொழும்பு மாவட்ட குப்பைப் பிரச்சினைக்கு தீர்வாக முன்னெடுக்கப்படும் புத்தளம் அறுவாக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்திற்கு எதிர்ப்பு வலுவடைந்துள்ள நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பாராளுமன்றக் குழு அறையில் புத்தளம் மாவட்ட சிவில் பிரதிநிதிகள், சர்வ மத தலைவர்கள், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனும் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.…