ஹஜ் செய்தித் தொகுப்பு – 2019
இவ் வருடம் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கு நேற்று முன்தினம் வரை 1.7 மில்லியன் யாத்திரிகர்கள் மக்காவுக்கு வருகை தந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை வரை விமானம் மூலம் 1,664,974 பேரும், தரை மார்க்கமாக 92,844 பேரும் கடல் மார்க்கமாக 17,249 பேருமாக 1,775,067 யாத்திரிகர்கள் வருகை தந்துள்ளதாக சவூதி அரேபிய உத்தியோகபூர்வ செய்தித் தாபனமான சவூதி ஊடக முகவரகம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபிய சிவில் விமான அதிகார சபை இம்முறை நடைமுறைப்படுத்திய உயர்தரமான நியமங்கள் காரணமாக ஜித்தாவிலும்…