ரணிலின் சதுரங்க விளையாட்டு…!
தற்கொலை தாக்குதலை தலைமைதாங்கி நடத்தி தன்னை மாய்த்துக் கொண்டபின் கடந்த நான்கு மாதங்களாக நாட்டில் பிரபலமடைந்திருந்தவர் சஹ்ரான். அந்தப் பயங்கரவாதியை பின்தள்ளாவிடினும் பௌத்த பேரினவாதிகளாலும் ஊடகங்களினாலும் பிரபலமாக்கப்பட்டவர் டாக்டர் ஷாபி. இவர்களின் பெயர்களை கடந்த சிலமாதங்களாக பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தவர்கள் ஆகஸ்ட் பதினோராம் திகதிக்குப் பின்னர் மஹிந்தவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை அடுத்து கோத்தா என்ற நாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தனர். அது கடந்து ஒரு வாரத்திற்குள்…