உள்ளூராட்சி தேர்தலில் மு.கா. தனித்து போட்டி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனித்து போட்டியிடவுள்ளதாக அக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மேல் மற்றும் மத்திய மாகாண கட்சியின் மத்திய குழுவும் தனித்து போட்டியிடவே விரும்பம் தெரிவித்துள்ளன. எனினும், எந்த சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.