ஆபத்தான சாகசமொன்றில் ஈடுபடும்போது ஏற்படும் சிறு தவறும் மரணத்திற்கு இட்டுச் செல்லும் என்ற பொதுவான கருத்தியலேயே, "கரணம் தப்பினால் மரணம்" என்பதற்கு நாம் கொண்டிருந்தோம்.
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது. நேற்றுமுன்தினம் இரவு தேர்தல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின் படி 43 சுயேட்சைக் குழுக்கள் அடங்கலாக 243 தரப்புகள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தன. அத்தோடு, 33 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
17 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவதா? அல்லது தனித்து களமிறங்குவதா? என்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் யூ.எல்.எம்.அலி சப்ரி பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார்.
மிகக் குறுகிய காலத்திற்குள் நீதி, வெளிவிவகாரம் மற்றும் நிதி ஆகிய முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த அவர் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.