இலங்கையில் அதிகரிக்கும் யானை-மனிதன் முரண்பாடு
இலங்கையைப் பொறுத்தவரையில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைத்தாக்கங்கள் சர்வசாதாரணமான ஒன்றாக மாறி விட்டது. பல்வேறு மனித தாக்கங்களினால் யானைகள் உயிரிழப்பதும் யானைகளால் மனிதர்கள் பாதிப்படைவதும் இன்றைய ஊடகங்களில் நாளாந்தம் கேட்கின்ற, பார்க்கின்ற ஒரு செய்தியாக எம்மால் காண முடிகிறது. தென்னாசியாவிலேயே இவ்வாறு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் அதிகமாக முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
இலங்கை வனஜீவராசிகள் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி 2017 ஆம் ஆண்டில் 286…