இலங்கைக்கு மேலும் 500 ஹஜ் கோட்டா
இலங்கைக்கு இவ்வருடம் 500 மேலதிக ஹஜ் கோட்டாவை வழங்குவதற்குத் தீர்மானித்திருப்பதாக சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார அமைச்சு ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலருக்கு நேற்று தொலைபேசியூடாக அறிவித்துள்ளதாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் தெரிவித்தார்.
சவூதி ஹஜ் அமைச்சு இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை 500 இனால் அதிகரித்துள்ளமை தொடர்பான எழுத்து மூலமான ஆவணத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் உரிய கடிதம் கிடைக்கப்பெற்றதும் மேலதிக ஹஜ் கோட்டாவைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் அரச ஹஜ் குழு…