பதவி துறந்த முஸ்லிம் எம்.பி.க்கள் மீண்டும் பதவியேற்பர்
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய நெருக்கடி நிலைக்குத் தீர்வாக தங்களது அமைச்சுப் பதவிகளை கூட்டாக இராஜினாமா செய்து கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் முன்னைய அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்வதாக நேற்றுத் தீர்மானித்தனர்.
தங்களது முன்னைய அமைச்சுப் பொறுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்று அவர்கள் நேற்று மாலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளமையைக்…