இலங்கை யாத்திரிகர்களுக்கான சேவைகள் தயார் நிலையில்
இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் எவ்வித உடல்நல பாதிப்புகளுமின்றி மக்காவில் தங்களது ஹஜ் கடமைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்களுக்குத் தேவையான வைத்திய சேவைகளை வழங்குவதற்கு மக்காவிலும் மதீனாவிலும் இலங்கையின் வைத்திய முகாம்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது. இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்களைக் கவனிப்பதற்காகவும் தேவையான உதவிகளை வழங்குவதற்காகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றும் அனுப்பி…