போலி உம்ரா முகவர்கள் தொடர்பில் எச்சரிக்கை
குறைந்த கட்டணத்தில் உம்ராவுக்கு அழைத்துச் செல்வதாக வாக்குறுதியளித்து மக்களிடமிருந்து போலி உம்ரா உப முகவர்கள் பணம் வசூலித்து வருவதாகவும் அதனால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அரச ஹஜ் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொது மக்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள ஹஜ், உம்ரா முகவர் நிலையங்களினூடாகவே தங்களது பயணங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.…