ஹஜ் யாத்திரை 2020 : இறுதித் தீர்மானம் நாளை
இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ நாளை தனது இறுதித் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளார். அரச ஹஜ் குழுவும், ஹஜ் முகவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் நேற்று முன்தினம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடினர். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.