சீனாவிலிருந்து நாடு திரும்பிய 33 மாணவர்களும் ஞாயிறன்று வீடு செல்வர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீனாவின் வூஹான் நகரிலிருந்து விஷேட ஸ்ரீலங்கன் விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தியத்தலாவை இராணுவ முகாமில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும் 33 மாணவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.