பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள்: பிரதான கட்சிகளுடன் இணங்குவதே நன்மை
முஸ்லிம் சமூகம் எதிர்வரும் தேர்தலில் பிரிந்து நிற்காமல் பிரதான கட்சிகளுடன் இணங்கிப்போவதே நன்மை பயக்கும் எனக்கருதுகிறேன். உலமா சபையும் இது விடயத்தில் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இது விடயத்தில் உலமா சபை மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தன்னைச் சந்தித்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகளை வேண்டிக் கொண்டார்.