எமது நாட்டில் ஆகஸ்ட் 5ஆம் திகதிபொதுத்தேர்தலொன்று நடைபெறவுள்ளது. ஆகஸ்ட்1 ஆம் திகதி ஹஜ் பெருநாளாகும் . இந்நிலைமையை கருத்திற் கொண்டு ஹஜ் கடமைக்கு சவூதியில் அனுமதி வழங்கப்பட்டாலும் இலங்கையிலிருந்து பெரும்பாலானோர் ஹஜ் கடமையை மேற்கொள்வது சாத்தியமில்லை.
‘பள்ளிவாசலுக்குள் எங்களைத் தடைசெய்வதற்கு நாங்கள் அடிப்படைவாதிகளோ, பயங்கரவாதிகளோ அல்ல. எங்களது பள்ளிவாசல் மீண்டும் எங்களுக்கு திருப்பித்தரப்பட வேண்டும். எதிர்வரும் ரமழானுக்கு முன்பு நாங்கள் மீண்டும் பள்ளிவாசலில் தொழ வேண்டும்.’ இது மஹர சிறைச்சாலை வளாக ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழின் ஆதங்கம்.