எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட, சர்வதேசத்தையே அதிரவைத்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல் முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதிகள் என முத்திரை குத்திவிட்டது. முஸ்லிம் சமூகத்தின் சிறியவோர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் சமூகத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதிவிட்டது என்று கூறலாம்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் கீழ் பல தசாப்தங்களாக நாட்டில் இயங்கிவரும் காதிநீதிமன்றங்களுக்கு என்ன நடக்கப்போகிறது? காதிநீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்படப்போகின்றனவா? இல்லையேல் சட்டத்தில் திருத்தங்களுடன் இக்கட்டமைப்பு திருத்தியமைக்கப்படப் போகிறதா? இதுவரை இது தொடர்பில் இறுதியான தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.