கட்சியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடினார் முஷாரப்

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எஸ்.எம்.முஷாரப் தான் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து கட்­சி­யினால் நீக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் கடந்த திங்­கட்­கி­ழமை வழக்கு தாக்கல் செய்­துள்ளார். தான் கட்­சி­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டமை இயற்கை நீதிக்கு முர­ணா­னது என தனது மனுவில் குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்கையின் முதலாவது ஹஜ் குழுவுக்கு சவூதியில் வரவேற்பு

இலங்­கை­யி­லி­ருந்து முதற் தொகுதி ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் 50 பேர் நேற்று முன்­தினம் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து சவூதி அரே­பி­யா­விற்குப் பய­ண­மா­கினர்.

இறுதி நேரத்தில் கிட்டிய ஹஜ் வாய்ப்பு

இவ்­வ­ருடம் இலங்­கை­யர்­க­ளுக்கு ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்­கான அனு­ம­தி­யினை அர­சாங்கம் வழங்­கி­ய­தை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் பெரும் மகிழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

அத்தர் மஹால் விவகாரம்: நீதிமன்ற உத்தரவையும் மீறி கடை நடத்தும் குத்தகைக்காரர்

கொழும்பு பெரிய பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான சுமார் 250 கடைத்­தொ­கு­தி­களை உள்­ள­டக்­கிய புறக்­கோட்டை கெய்சர் வீதி­யி­லுள்ள ‘அத்தர் மஹால்’ கட்­டி­டத்தை 9 வருட குத்­த­கைக்கு பெற்­றுக்­கொண்­டவர் நீதி­மன்ற உத்­த­ர­வி­னை­யயும் மீறி தொடர்ந்தும் கட்­டி­டத்தை மூடி­வி­டாது நடாத்தி வரு­வ­தாக கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாகம் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்­தது.