‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பரிந்துரைகளை ஏற்பது அரசின் பொறுப்பு
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில்லை என்று தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் இறுதி அறிக்கையில் எந்தவோர் இனத்தையும் மதத்தையும் இலக்காகக் கொண்ட பரிந்துரைகள் உள்ளடங்கியில்லை என அதன் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.