முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீலாத் நபி விழா கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
‘திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட இஸ்லாம் சமய பாடநூல்கள் அடுத்த மாதம் நவம்பர் ஆரம்பத்தில் அதிபர்கள் ஊடாக மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும். கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையைக் கருத்திற்கொண்டு 10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களுக்கு விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படும்’ என கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பீ.என்.அயிலப்பெரும 'விடிவெள்ளி'க்குத் தெரிவித்தார்.
எமது நாட்டில் அமுலிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நீண்ட காலமாகவே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவந்துள்ளன. இடைக்கிடை திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து சிபாரிசுகளை முன்வைப்பதற்கு குழுக்களும் நியமிக்கப்பட்டன.
பள்ளிவாசலில் மசூரா மூலம் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய கருத்து முரண்பாடுகளுடன் கூடிய பிரச்சினையொன்று பன்சலை வரை சென்று தற்காலிகமாக சமாதானம் செய்து வைக்கப்பட்டுள்ளது.