முஸ்லிம்கள் நாம் சமாதானத்தை விரும்புபவர்கள். நாட்டின் ஏனைய இன மக்களுடன் புரிந்துணர்வுடனும் நல்லிணக்கத்துடனும் வாழுபவர்கள் என்று நமக்கு நாமே மார்தட்டிக்கொள்கிறோம்.
சவூதி அரேபியாவில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாகி சிறையில் வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் ஒருவர் 7 வருடங்களின் பின்பு அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் அண்மையில் விடுதலையாகி இலங்கை திரும்பியுள்ளார்.
‘நான் உங்களது விசா விடயமாக எம்பசிக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். விசா ஏற்பாடுகள் முடிந்த பிறகு மீண்டும் போன் பண்ணுகிறேன்.’ தென்கொரியாவின் தலை நகர் சியோலில் இருந்து மொஹமட் ஜினாத் இறுதியாக தனது மனைவி பாத்திமா சப்னாவுடன் உரையாடிய வார்த்தைகள் இவை.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் கடிதத் தலைப்பு, உத்தியோகப்பூர்வ சின்னம் மற்றும் உலமா சபையின் தலைவரது கையொப்பம் என்பனவற்றை போலியாக தயாரித்து சமூக வலைத்தளங்களில் போலியான செய்தி பரப்பப்பட்டு வருகின்றமைக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அர்கம் நூராமித் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.