65 நிர்வாகப் பிரிவுகளுக்கு காதி நியமனங்கள் இன்மையால் சிரமம்
நாட்டில் இயங்கிவரும் 65 காதிநீதி நிர்வாகப் பிரிவுகளுக்கு நிரந்தர காதி நீதிபதிகள் நியமிக்கப்படாததால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ள காதி நீதிவான்கள் போரம்,இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவைக் கோரியுள்ளது.