ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்

பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜராகி பிரதமர் தெரிவிப்பு ; ஸஹ்ரான் குழுவினர் கொல்லப்பட்ட போதிலும் கூட வேறு நபர்கள் உருவாகலாம் என்கிறார்

0 677

ஈஸ்டர் தாக்­குதல் இடம்­பெற்ற நிலையில் அதில் இருந்து அர­சாங்கம் தப்­பிக்க முடி­யாது. அர­சாங்கம் இதற்கு பொறுப்­பேற்க வேண்டும் என்­பதே எனது நிலைப்­பாடு. இந்த தாக்­கு­தலில் சஹ்ரான் குழு­வினர் கொல்­லப்­பட்ட போதிலும் கூட வேறு நபர்கள் உரு­வா­கலாம். இது புற்­றுநோய் போன்­றது. ஆகவே இதனை கண்­கா­ணிக்க வேண்டிய அவசியம் உள்­ளது. அத்­துடன் சஹ்ரான் தமிழில் பயங்­க­ர­வாத பிர­சா­ரங்கள் செய்ததால் அவரால் இலங்­கைக்கு மட்­டு­மல்ல தென்னிந்தியாவிற்கும் பாரிய அச்­சு­றுத்தல் உள்ளது என பிரதமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வுக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சாட்­சி­ய­ம­ளிக்க அழைக்­கப்­பட்ட போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சாட்­சி­ய­ம­ளிக்­கையில் இவற்றை கூறினார்.

கேள்வி :- சாட்­சி­ய­ளித்த சிலர் பல கார­ணி­களை கூறி­யுள்ளனர். இதில் உங்­க­ளையும் சிலர் அறி­வு­றுத்­தி­யுள்­ளனர் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அது குறித்து உங்­களின் கருத்தை கூறுங்கள்?

பதில்:- அவ்­வப்­போது இந்த கார­ணிகள் கிடைத்­தன. அதேபோல் புல­னாய்வு அதி­கா­ரி­களும் கார­ணி­களை தெரி­வித்­துள்­ளனர். அனைத்­தையும் எனக்கு கூற வேண்­டிய அவ­சியம் இல்லை.பிர­தான கார­ணி­களை மட்டும் கூறுங்கள் என வலி­யு­றுத்­தினேன். ஐ.எஸ் அமைப்பு குறித்து கூறப்­பட்­டது. அதில் இலங்­கையில் ஒருவர் மர­ண­ம­டைந்த காரணி குறித்து கூறப்­பட்­டது. அப்­போது நாம் தேர்தல் காலத்தில் இருந்தோம். பின்னர் இன்னும் ஒருவர் அங்கு சென்­ற­தாக கூறி­னார்கள். ஆனால் இலங்­கைக்குள் இவ்­வாறு பயங்­க­ர­வாத செயற்­பாடு ஒன்று உரு­வா­வ­தாக கூற­வில்லை. நான் அமைச்­ச­ராக இருந்த காலத்தில் அவ்­வ­ள­வுதான் தெரியும்.

கேள்வி :- பிர­த­ம­ராக உங்­க­ளுக்கு எந்த வகையில் இந்த தக­வல்கள் வரு­கின்­றது?

பதில் :- பாது­காப்பு துறையை விட சட்டம் ஒழுங்கு அமைச்சின் மூல­மா­கவே கார­ணி­களை அறிந்­து­கொள்ள முடிந்­தது.

கேள்வி :- பாரா­ளு­மன்­றத்தில் மற்றும் நாட்டின் அனு­ப­வ­முள்ள அர­சியல் தலைவர் என்ற வகையில் இந்த பயங்­க­ர­வாதம் மெது­வாக உள்­நு­ழைந்­துள்­ளது என்ற கார­ணியை அறிந்­து­கொள்ள முடி­ய­வில்­லையா ?

பதில்:- சட்டம் ஒழுங்கு அமைச்சின் மூல­மாக அறிந்­து­கொள்ள முடிந்­தது. பாது­காப்பு கூட்­டங்­களில் சில கார­ணிகள் அறிந்­து­கொள்ள முடிந்­தது. காத்­தான்­குடி தான் அடிப்­ப­டை­வாத கேந்­தி­ர­மாக இருந்­தது.

கேள்வி :- இதன்­போது என்ன நட­வ­டிக்­கைகள் நீங்கள் எடுத்­துள்­ளீர்கள்?

பதில்:- அர­சியல் தலை­வர்­க­ளுடன் நான் பேசி­யுள்ளேன். சஹ்­ரானை கைது­செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அவரை கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

கேள்வி:- சில முஸ்லிம் மத தலை­வர்கள் அவ்­வப்­போது சஹ்ரான் குறித்து தெரி­வித்­துள்­ளனர். சஹ்லான் என்ற மௌலவி உங்­க­ளுக்கும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கும் அறி­வித்­துள்ளார்?

பதில்:- இதில் சூபி பள்­ளி­வாசல் ஒன்று தாக்­கப்­பட்ட சம்­பவம் குறித்து அப்­போது பேசப்­பட்­டது. எனக்கு தெரிந்த வகையில் பொலி­சா­ருக்கு விசா­ரணை நடத்­தவும் வலி­யு­றுத்­தப்­பட்­டது. சஹ்ரான் கைது­செய்­யப்­பட வேண்டும் என்ற கட்­ட­ளையும் விடுக்­கப்­பட்­டது. இதில் சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­நாடு சென்­றுள்ளார் என்றே நம்­பப்­பட்­டது. அப்­போ­தி­லி­ருந்து சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

கேள்வி :- நீங்கள் பொலிஸ் பொறுப்பு அமைச்­ச­ராக இருந்த காலத்தில் அம்­பாறை திகனை சம்­ப­வங்கள் இடம்­பெற்­றது. அப்­போது நட­வ­டிக்கை ஏதும் எடுத்­தீர்­களா ?

பதில் :- திகன சம்­பவம் இடம்­பெற்ற நேரத்தில் சிரியா சென்ற நபர்கள் இதில் தொடர்பில் இருந்­தார்­களா என்று புல­னாய்­வுக்கு அறி­வு­றுத்­தினேன். ஆனால் உறு­தி­யாக தெரி­ய­வில்லை.

கேள்வி :-தவ்ஹித் ஜமாஅத் அமைப்பை ஏன் அப்­போதே தடுக்க முடி­ய­வில்லை?

பதில் :- அவர்கள் மட்டும் அல்ல பெளத்த அடிப்­ப­டி­வாத அமைப்­பு­களும் இருந்­தன. ஆகவே பெரி­தாக அவற்றை கருத்தில் கொள்­ள­வில்லை. அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களை தடுக்க முதலில் வழக்கு தொடர வழி­முறை என்ன என்­பதை தேடிப்­பார்க்க வலி­யு­றுத்­தினேன். அப்­போ­துதான் சஹ்ரான் குறித்து அறிய முடிந்­தது.

கேள்வி :-வெளி­நா­டு­களில் இருந்து மத தலை­வர்கள் மத­ரசா கற்­கைகள் என இங்கு வரு­கின்­றனர். இது குறித்து ஆரா­ய­வில்­லையா?

பதில் :- இது குறித்து முஸ்லிம் விவ­கார அமைச்­சிடம் பொறுப்­புக்­கொ­டுக்­கப்­பட்­டது. வேறு புல­னாய்வு தக­வல்கள் இருக்­க­வில்லை. வெளியில் இருந்து வந்த நபர்கள் குறித்தும் தாக்­கு­தலின் பின்னர் தான் அறிந்­து­கொள்ள முடிந்­தது. உள்­ளக விவ­கார அமைச்சர் மூல­மாக தெரிந்­து­கொள்ள முடிந்­தது.

கேள்வி :- அரச மொழி­க­ளுக்கு அப்பால் அரபி மொழியை பயன்­ப­டுத்­து­வது குறித்து சில கார­ணி­களை முன்­னரே கூறப்­பட்­டது. அக்­கறை செலுத்­தப்­ப­ட­வில்­லையா?

பதில் :- கிழக்கை விடவும் வேறு பகு­தி­களில் தான் அவ்­வாறு இருந்­த­தாக அறிந்­து­கொள்ள முடிந்­தது.அவர்கள் குறித்து தேடி ஆராய வலி­யு­றுத்­தப்­பட்­டது. அரபி மொழி பயன்­ப­டுத்­து­வ­தாக கூறப்­பட்ட போது தனி நிறு­வ­னங்கள், மத இடங்­களில் இருந்­த­தாவும் அரச செயற்­ப­டு­களில் இருக்­க­வில்லை என அப்­போது எனக்கு பதில் கிடைத்­தது.

கேள்வி :- பாது­காப்பு குழு முறை­யாக கூட­வில்லை என தகவல் கிடைத்­துள்­ளது. அதில் பேசப்­பட்ட விட­யங்கள் குறித்தும் அறிந்­து­கொள்ள முடிந்­தது. இந்த குழு அடிப்­ப­டை­வா­தத்­திற்கும் அப்பால் சென்­றுள்­ளனர் என்­பது இறுதி ஆண்­டு­களில் அறிந்­து­கொள்ள முடிந்­த­தது. இவற்றை பார்க்­கையில் இது குறித்து அமைச்­ச­ர­வையில் பேச­வில்­லையா?

பதில் :- பேசினோம். கபீர் ஹசீமின் ஆத­ர­வாளர் மீதான தாக்­குதல் குறித்தும் ஏனைய சில சம்­ப­வங்கள் குறித்தும் மான­வ­னல்லை சம்­பவம் குறித்தும் பேசப்­பட்­டது.

கேள்வி :- மான­வல்லை சம்­ப­வத்தை ஆராய்ந்து சென்ற போதே வணாத்­த­வில்­லுவில் வெடி­பொருள் கிடைத்­தது. பொறுப்­புள்ள அனு­ப­வ­முள்ள ஒரு­வ­ராக அமைச்­ச­ர­வையில் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க முடியம் தானே?

பதில் :- இது குறித்து அவ்­வப்­போது உரிய நபர்­க­ளிடம் வின­வி­யுள்ளேன். விசா­ர­ணைகள் இடம்­பெற்­றது. ஆனால் ஆதா­ர­பூர்­வ­மான தக­வல்கள் இருக்­க­வில்லை. பொலிஸ் அதி­கா­ரி­களின் கொலை­யுடன் இவற்­றுக்கு தொடர்­பில்லை என கூறப்­பட்­டது.

கேள்வி :- புல­னாய்வு கடிதம் தாக்­கு­த­லுக்கு முன்னர் கிடைத்­ததா?

பதில்:- இல்லை, பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கி­ய­தாக கூறிய கடிதம் கூட கிடைக்­க­வில்லை. எனக்கு பிர­தமர் பாது­காப்பு பிரிவு உள்­ளது . அவர்­க­ளுக்கும் கிடைக்­க­வில்லை.

கேள்வி :- இந்த தாக்­குதல் குறித்து முன்­கூ­ய­டியே தக­வல்கள் கிடை­தத்­தாக அறிந்­து­கொள்ள முடிந்­தது. உங்­களின் பாது­காப்பு அதி­கா­ரிகள் கூட அவற்றை கூற­வில்­லையா?

பதில்:- எமது அதி­கா­ரி­க­ளுக்கு எந்த கடி­தமும் கிடைக்­க­வில்லை.

கேள்வி :- சிலர் அறிந்­தி­ருந்­த­தாக கூறினர்?

பதில்:- நான் கொழும்பு வந்­த­பின்­னரே அறிந்­து­கொண்டேன்.

கேள்வி :- ஹரின் பெர்­னாண்டோ தனது தந்தை கூறினார் என கூறினார்?

பதில்:- பொலிசார் கூற­வில்லை என்றே அவரும் கூறினார்

கேள்வி :- இவ்­வ­ளவு முக்­கி­ய­மான விடயம் உங்­க­ளுக்கு அறி­விக்­கப்­ப­டா­தது பல­வீ­ன­மாக நினை­கி­றீர்­களா?

பதில்:- ஆம் குறை­பாடு தான். 9 ஆம் திகதி பேசப்­பட்ட விடயம். அப்­போதும் நான் கொழும்பில் தான் இருந்தேன்.

கேள்வி:- தாக்­கு­தலின் பின்னர் நீங்கள் பாது­காப்பு கூட்­டத்தை கூட்ட முயற்­சிகள் எடுத்­தீர்கள் அல்­லவா?

பதில்:- ஆம், அலரி மாளி­கையில் அழைத்தேன் . பின்னர் பாது­காப்பு அமைச்­சிற்கு சென்றேன். காலத்தை கடத்­தாது நான் அங்கு சென்றேன். நிலை­மை­களை உணர்ந்­த­வ­னாக எனக்கு முன்னர் இருந்த அனு­பவம் மூலம் நன் அதனை செய்தேன்.

கேள்வி :- தாக்­கு­தலின் பின்னர் நாட்டின் சட்டம் குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டது. முஸ்லிம் சட்­டங்கள் குறித்து இப்­போ­துள்ள நிலைமை என்ன?

பதில் :- இது குறித்து ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது. முஸ்லிம் அமைச்­சர்­களின் ஆலோ­ச­னை­களை பெற்று சில கார­ணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. நீதி அமைச்­சரும் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றார். இங்­கி­லாந்தில் மூன்று ஆண்­டு­க­ளுக்கு ஒரு தடவை சட்டம் மாற்­றப்­பட்டு வரு­கின்­றது. நாமும் மாற்­றங்­களை கொண்­டு­வர வேண்டும் என்ற ஆலோ­ச­னையை வழங்­கி­யுள்ளேன்.

கேள்வி :- இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் பயங்­க­ர­வா­தத்தின் முதல்­படி. இதனை தெரிந்­து­கொள்ள வேண்டும் தானே?

பதில் :- அடிப்­ப­டை­வா­தத்தில் இருந்­துதான் பயங்­க­ர­வாதம் உரு­வா­கின்­றது. நாம் விடு­த­லைப்­பு­லிகள் குறித்த நகர்­வு­களில் இருந்தோம். சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் குறித்து ஆராய வேண்டும். தக­வல்கள் பரி­மாற்­றலில் சில குறை­பா­டுகள் இருந்­துள்­ளது. ஏன் அது இடம்­பெற்­றது என்­பதை தான் ஆரா­ய­வேண்டும். சஹ்ரான் சட்ட விரோ­த­மாக நாட்டை விட்டு போய்­விட்டார் என்று கூறப்­பட்ட பின்னர் அப்­போது தேடிப்­பார்த்­தி­ருக்க வேண்டும். அப்­போது நாம் ஆட்­சியில் இருக்­க­வில்லை.

கேள்வி :- அவர் இங்கு சுதந்­தி­ர­மாக நட­மா­டி­யுள்ளார். நாம் தான் கவனம் செலுத்­தாது இருந்­துள்ளோம் என நான் நினை­கின்றேன்?

பதில் :- புல­னாய்­வுத்­து­றை­யி­ன­ருக்கு எவ்­வாறு தகவல் கிடைக்­காது போனது என்­பதில் தான் சிக்கல் உள்­ளது. சரி­யான தக­வல்கள் இருந்­தி­ருந்தால் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க முடியும்.

கேள்வி :- வெளி­நாட்டில் இருந்­துதான் இறுதி புல­னாய்வு வந்­துள்­ளது. எமது புல­னாய்வு பல­வீனம் என நினை­கி­றீர்­களா?

பதில் :- இது பல­வீ­ன­மான விடயம் என்றே நினைக்­கிறேன்.

கேள்வி :- சஹ்ரான் குழு குறித்து தொடர்ச்­சி­யாக கைதுகள் இடம்­பெற்று வரு­கின்­றது. இன்று நிலை­மைகள் மோச­மாக உள்ள நிலையில் பாது­காப்பு நிலைமை ஆரோக்கியமானது என நீங்களும் ஜனாதிபதியும் கூறுகின்றீர்கள். எவ்வாறு?

பதில்:- இந்த சூழ்ச்சியில் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேரடி தொடர்பில் மட்டும் அல்ல என்ன வகையிலேனும் தொடர்புபட்ட நபர்கள் என்றால் அவர்களை கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என கோரியுள்ளோம். ஒரு குழு அழிக்கப்பட்ட காரணத்தினால் பிரச்சினை முடிந்ததாக கூற முடியாது. இது புற்றுநோய் போன்றது. ஒரு குழு முடிந்துவிட்டது என திருப்தி கொள்ள முடியாது. வேறு யார் உள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும். யாரின் கொள்கை உருவாகின்றது. ஆயுதம் என்பது துப்பாக்கி மட்டும் அல்ல. வேறு எதனையும் பயன்படுத்த முடியும். புதிய பயங்கரவாத யுகத்தில் உள்ளதால் அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். சஹ்ரான் தமிழில் பிரசாரம் செய்ததால் இலங்கைக்கு மட்டும் அல்ல தென்னிந்தியாவிற்கும் பாரிய அச்சுறுத்தல். ஆகவே தான் அவர்கள் அக்கறை செலுத்துகின்றனர்.

ஆர்.யசி

vidivelli

Leave A Reply

Your email address will not be published.